06ஆம் திகதிக்குள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவும் : ஒப்படைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 3, 2024

06ஆம் திகதிக்குள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவும் : ஒப்படைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 6ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக அறிக்கைகளை தனித்தனியாக தயாரித்து வேட்பாளர்கள் போட்டியிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியல் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கைகளை பொதுத் தேர்தல் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் சாதாரண வேலை நாட்களில் மாலை 6.00 மணி வரையும், 6ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையும், வேட்பாளர்களும், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் செலவு அறிக்கையை ஒப்படைக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வருமான செலவின அறிக்கைகளை ஏற்கும் சிறப்புப் பிரிவுகள் செயல்படும்.

மேலும், வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ உரிய அறிக்கைகளை ஒப்படைக்காமல் இருப்பது தேர்தல் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment