நீரிழிவு நோயினால் அதிகரித்து வரும் பாதிப்புகளை எதிர்த்துப் போராடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற முயற்சியான சுவ திவிய நிறுவனம், இலங்கையில் முதன்முறையாக ‘Live Well Health Fair’ சுகாதார கண்காட்சியொன்றை ஒழுங்கு செய்துள்ளது.
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் தொற்றா நோய்களற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியானது நவம்பர் 30ஆம் திகதி சனிக்கிழமை, காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பு 07இல் உள்ள Arcade சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
சுவ திவியவின் கருத்துருவாக்கமான இந்த சுகாதார திட்டமானது, சுகாதார கல்வியும் விழிப்புணர்வும் நவீன வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட வேண்டிய மிக முக்கிய அம்சங்கள் என்ற உறுதியான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. குழந்தை பருவத்திலிருந்தே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதும், வயது வேறுபாடின்றி அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்பதும் தான் இதன் முக்கிய நோக்கமாகும்.
இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் மற்றும் உடல் பருமன் போன்ற தொற்றா நோய்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘Live Well Health Fair’ சுகாதார கண்காட்சி ஒரு உண்மையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய மாற்றத்தை உருவாக்கும். அத்துடன், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான அறிவையும் வழிமுறைகளையும் மக்கள் பெற இது உதவும். இந்த சுகாதார கண்காட்சியில் பொதுமக்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் செயல்பாடுகளில் ஈடுபடவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் நீரிழிவு நோய் முகாமைத்துவம், இருதய ஆரோக்கியம், ஊட்டச்சத்து, மற்றும் உடற்பயிற்சி போன்ற முக்கிய தலைப்புகளில் தகவல் நிறைந்த அமர்வுகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சுகாதார கண்காட்சி அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் தனித்துவமான மற்றும் புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் இலவச மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், உடல் பருமன் குறியீடு (BMI), இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, பார்வை பரிசோதனை, இரத்த அழுத்த அளவு, நீரிழிவு நோயாளிகளுக்கான பாத பரிசோதனை ஆகியவை இதில் அடங்கும்.
இது தவிர, Abans PLC, Paan Paan, CIC, Easy Kitchen, Nawaloka, Caretech, Sunshine Tea, Healthguard மற்றும் Green Leaf போன்ற முன்னணி நிறுவனங்களின் ஆரோக்கியமான உணவு பொருட்கள் மற்றும் நலத்திட்டப் பொருட்களுக்கு விசேட சலுகைகள் இந்தக் கண்காட்சியில் வழங்கப்படும்.
பொதுமக்கள் ஆரோக்கியமான சமையல் செய்முறை விளக்கங்களிலும், உடற்பயிற்சி நடவடிக்கைகளிலும் பங்கேற்று, நடைமுறை சத்துணவு பற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்ள தனித்துவமான வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்கள் அறிவையும் பரிசோதித்துக் கொள்ளலாம்.
‘Live Well Health Fair’ சுகாதார கண்காட்சியில் சிறு குழந்தைகளுக்கான சிறப்பு பகுதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Atlas Axilia நிறுவனத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த விளையாட்டுப் பகுதியில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றி சிறுவர்களுக்கு கற்றுத்தரும் வகையில் மகிழ்ச்சிகரமான விளையாட்டுகளும் செயல்பாடுகளும் இடம்பெறும்.
அதுமாத்திரமின்றி, இந்த கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பான பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உண்டு. மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் கற்றல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட செயல்பாடுகளால் நிறைந்த ஊக்கமளிக்கும் இந்த நாளை தவற விடாதீர்கள். அதேபோல, தனிநபர் நல்வாழ்வை மேம்படுத்தவும், அறிவை விரிவுபடுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
‘Live Well Health Fair’ சுகாதார கண்காட்சி பற்றிய மேலதிக தகவல்களுக்கு +94 773533791 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் Suwa Diviya ஐ தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment