ஓட்டமாவடி மியாங்குள வீதியில் விபத்து : முன்னாள் பலநோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர் மரணம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 9, 2024

ஓட்டமாவடி மியாங்குள வீதியில் விபத்து : முன்னாள் பலநோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர் மரணம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி மியாங்குள - கொழும்பு வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி அக்கர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் பாறூக் என்பர் தான் முகாமையாளராக பணிபுரியும் ரிதிதென்ன எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்குச் செல்லும் போதே விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குறித்த நபர் மீது எதிரே வந்த சிறிய லொரி (எல்ப) வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய ஆசிரியை திருமதி ஜெஸீமா என்பவரின் கணவராவார்.

மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் இவர் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளராகக் கடமையாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment