நீர்நிலைகளுக்கு அருகில் வாழும் மக்கள் அவதானம் - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, November 27, 2024

demo-image

நீர்நிலைகளுக்கு அருகில் வாழும் மக்கள் அவதானம்

a42f432e30d5233ee748eb8cc2c04593_XL
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் நிலைகள், குளம் மற்றும் ஆறு என்பவற்றுக்கு அருகில் வாழும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குளங்களில் பாரிய குளமாக உன்னிச்சை குளம் காணப்படுகின்றது. இது தற்போது திறந்து விடப்பட்டுள்ளன. 

ஆறு, குளங்கள் மற்றும் தாழ்நில பகுதிகளை அண்மித்து வசிப்பவர்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், பயணங்களை மேற்கொள்ளும்போது வீதி மார்க்கங்களில் உள்ள பாலங்கள், நீரேந்து பகுதிகளால் பயணிக்கும்போதும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்துடன் இருப்பதுடன், வெள்ள அபாயம் ஏற்படுமிடத்து, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *