2025 ஆம் ஆண்டுக்கான சீன அரசால் நன்கொடையாக வழங்கப்படுகின்ற பாடசாலை சீருடைத் துணி, பாடசாலை மற்றும் பிரிவினாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச் சீருடைத் துணியின் மொத்தத் தேவை 11.82 மில்லியன் மீற்றர்களாகும். குறித்த முழுத் தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த துணித் தொகைக்குரியவாறு கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள மாதிரிகளுக்கமைய, இலங்கை நெசவு மற்றும் ஆடைக் கைத்தொழில் நிறுவகத்தின் (SLITA)) மூலமாக பரிசீலிக்கப்பட்ட பின்னர், குறித்த சீருடைத் துணிகள் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தமானதென விதந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவினாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சீருடைத் துணியை விநியோகிப்பதற்கான சீன அரசின் நன்கொடையைப் பொறுப்பேற்பதற்காக கல்வி,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2025ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென்ஹொங் தெரிவித்துள்ளார்.
கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில்; 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புலமைப்பரிசில் திட்டம், தற்போது இலங்கை முழுவதும் 20 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் செயற்படுகிறது.
2024ஆம் ஆண்டில் 80 சதவீத பாடசாலை சீருடைத் துணிகளையும், 2023 ஆம் ஆண்டு இலங்கை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடைத் துணிகளில் 70 வீதத்தையும் 2024 இல் வீதமான சீருடைத் துணிகளையும் நன்கொடையாக சீனா வழங்கியதாகவும், அந்தத் தொகையை 2025 ஆம் ஆண்டில் 100 சதவீதமாக அதிகரிக்க சீனா தீர்மானித்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
வருட இறுதிக்குள் 3 பிரிவுகளின் கீழ் இதனை வழங்க எதிர்பார்ப்பதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.
இந்த புலமைப்பரிசில் திட்டம் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது இலங்கையில் 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதுவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment