கடந்த காலங்களில் நான்கு பிரதிநிதித்துவத்தை கொண்ட கண்டி மாவட்டத்தில், தற்போது இரண்டு பிரதிநிதிநித்துவங்களே உள்ளதாகவும், இந்த பிரதிநித்துவங்களைப் பாதுகாப்பது இன்றைய முஸ்லிம் சமூகத்தின் கட்டாயப் பொறுப்பு எனவும் யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், கண்டி மாவட்ட சுதந்திர அரசியல் மன்றத்தின் தலைவருமான வஸீர் முக்தார் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட சுதந்திர அரசியல் மன்றத்தின் ஏற்பாட்டில் “அரசியல்வாதியின் வகிபாகமும் பொறுப்புக் கூறக்கூடிய குடி மகனும்” என்ற தொனிப் பொருளிலான செயலமர்வு கண்டி ஓக்ரோ ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய வஸீர் முக்தார், அன்று காணப்பட்ட இருமுனை போட்டி அல்ல இன்று காணப்படுவது. நான்கு பிரதான கட்சிகளும் ஒரு சுயேச்சை குழு என்ற அடிப்படையில் ஐமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ளமை ஒரு துரதிருஷ்டமான சம்பவமாகும்.
எனவே, இன்றைய காலகட்டத்தில் மிகவும் தூர நோக்கத்துடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் எமது வாக்குகள் சிதறடிக்கப்படாமல் பயன்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.
தமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கும் எமது கண்டி மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மிக மிக அவசியமாகும்.
இன்றைய அரசியல் மாற்றத்தின் ஊடாக எமது முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்து ஏற்படுமாயின், பாராளுமன்றத்தில் ஒரு அபாயகரமான சந்தர்ப்பத்தை உருவாக்கி விடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
எனவே, கண்டியில் தொடர்ந்து ஓர் ஆரோக்கியமான அரசியல் சூழலை வைத்துக் கொள்வதற்கு அனுபவமும் அறிவும் சார்ந்த முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தை பாதுகாக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment