எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்கள் தங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிந்தித்து பெறுமதியான வாக்கினை அளிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்,ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் (09) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயை அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், எதிர்வருகின்ற பாராளுமன்றத்தில் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பலம் முக்கியத்துவம் பெறப்போகின்றது.
தனித்து அதிகளவு பெரும்பான்மையைப் பெற முடியாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினை போன்ற விடயங்களுக்கும் தீர்வு காணும் தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு சிறுபான்மையினரில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை உருவாகப் போகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதியாகவும், தெளிவாகவும், விலைபோகாமலும் தன் இனத்திற்காக உழைக்கக்கூடிய, போராடக்கூடிய தலைமையை வலிமையோடு பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்கு சிறுபான்மை இனமான தமிழ், முஸ்லிம் மக்கள் இத்தேர்தலில் தங்களின் வாக்கினை பயன்படுத்த வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரியினையும், அடையாளத்தையும் பெற்றுக் கொண்டவர்கள்தான் இப்போது இக்கட்சிக்கு எதிரான முகாம்களில் இருந்து கொண்டு கட்சியினை பலவீனப்படுத்துகின்ற துரோகத்தனமான அரசியலையும், செய்கின்றவர்களுக்கு எதிராகத்தான் மிக நேர்மையாக முஸ்லிம் காங்கிரஸ் அரசியலை செய்ய வேண்டியுள்ளது.
எனவே, இத்தேர்தலில் பெருந்தலைவர் அஷ்ரப் உருவாக்கிய பேரியக்கமான முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment