ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு பொருத்தமான பாராளுமன்றம் இம்முறை பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஹோமாகம பிரதேசத்தல் நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேபோன்று எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிந்தனைகள் போன்று அரசியல் மாற்றத்துக்காக பொருத்தமான தரப்புடன் பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கமானது நாட்டுக்கு பொருத்தமான வரவு, செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தரமான தரப்பினரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தேர்தல் வெற்றி எண்ணிக்கையில் மட்டுமன்றி சிறந்த மாற்றங்களும் அவசியமெனவும் குறிப்பிட்டுள்ள அவர், திருடர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி மாற்றங்களை எதிர்பார்க்க முடியாதெனவும் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை பற்றி சிந்திக்கும்போது இதுவரைகாலமும் இருந்த மோசமான எண்ணங்கள் வரக் கூடாதென்ற வகையில் அந்த மாற்றத்தை மக்களே மேற்கொள்ள வேண்டுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment