சைபர் நிதி மோசடியை சி.ஐ.டிக்கு அறிவிக்கவும் : மக்களுக்கு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 7, 2024

சைபர் நிதி மோசடியை சி.ஐ.டிக்கு அறிவிக்கவும் : மக்களுக்கு அறிவுறுத்தல்

சைபர், நிதி மோசடியை எதிர்கொள்ள நேர்ந்தால், உடனடியாக குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. 

அதற்கிணங்க சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை dir.ccid@police.gov.lk என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

மக்கள் தமது சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அதன் உத்தியோகத்தர்களின் நிரந்தர பாதுகாப்பு முறைமையை பின்பற்றுவது சிறந்தது என்றும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது சமூக ஊடக கணக்கு வேறு ஒரு நபரின் செயற்பாட்டிற்கு இலக்காவதை தடுப்பதற்காக, தமது தொலைபேசி இலக்கம் அல்லது குறித்த கணக்குக்கு கிடைத்துள்ள இரகசிய இலக்கம் ஆகியவற்றை வெளி தரப்பினருக்கு அனுப்புவதற்கு முன்பதாக அவர்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுள்ளது.

No comments:

Post a Comment