காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் காதலன் இரத்தினபுரி, வெவெல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, கைது செய்யப்பட்ட காதலனும் இரத்தினபுரி , வெவெல்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய காதலியும் நீண்ட நாட்களாகக் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரான காதலன், தங்களது திருமணம் தொடர்பில் குடும்பத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாக கூறி காதலியிடம் ஒரு இலட்சம் ரூபா பணம் கோரியுள்ளார்.
இதனால், இந்த காதலி சந்தேகநபரான காதலனிடம் பணம் மற்றும் தங்கச் சங்கிலி ஆகியவற்றைக் கொடுத்துள்ளார்.
பின்னர், சந்தேகநபரான காதலன் தனது காதலியிடம் மேலும் பணம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
காதலி பணம் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததால் சந்தேகநபரான காதலன் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி அச்சுறுத்தி காதலியிடம் பணம் கோரியுள்ளார்.
பின்னர், பாதிக்கப்பட்ட காதலி இது தொடர்பில் வெவெல்வத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment