புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமையவே ரவி கருணாநாயக்கவின் பெயர் - புதிய ஜனநாயக முன்னணி - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 20, 2024

புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமையவே ரவி கருணாநாயக்கவின் பெயர் - புதிய ஜனநாயக முன்னணி

(எம்.ஆர்.எம்.வசீம்)

பொதுத் தேர்தலில் கிடைக்கப் பெறும் தேசியப்பட்டியல் உறுப்பினர்களில் ஒன்றை புதிய ஜனநாயக முன்னணி பெயரிடும் உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தது. அதன் பிரகாரமே புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியதாகவும் அது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்ததாகவும் முன்னணியின் செயலாளர் ஷாமிலா பெரேரா அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை நோக்காக்கொண்டு, பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி (கின்னம் சின்னம்), ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி (கதிரை சின்னம்), புதிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகள் புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைக்க இணக்கம் தெரிவித்தன.

அதன் பிரகாரம் எமது கட்சியின் உத்தியோகபூர் சின்னமான அண்ணம் சின்னத்தை கேஸ் சிலிண்டராக மாற்றியமைக்கவும் கட்சி யாப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு அதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறும் குறித்த கட்சிகள் எங்களிடம் கேட்டிருந்தன. அதன் பிரகாரம் குறித்த கட்சிகள் மற்றும் புதிய ஜனநாயக முன்னணிக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தின் 5ஆவது உப பிரிவின் பிரகாரம், தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய கிடைக்கப் பெறும் தேசியப்பட்டியலில் குறைந்தபட்சம் ஒரு பதவியை புதிய ஜனநாயக முன்னணியினால் பெயரிடப்படும் உறுப்பினர் ஒருவருக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றன. கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு தேசியப்பட்டியலுக்கு எமது கட்சியால் பெயரிடப்பட்ட ஒருவரை பெயரிடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அதன் பிரகாரம் கடந்த 17ஆம் திகதி கூடிய எமது கட்சியின் செயற்குழுவினால், தேசியப்பட்டியலுக்கு பெயரிடப்பட்டிருக்கும் உறுப்பினரான ரவி கருணாநாயக்கவை அந்த பதவி்க்கு பெயரிடுவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

2024 நவம்பர் 18ஆம் திகதியாகும்போது தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டிருக்க வேண்டி இருந்தபோதும் அதுவரை கூட்டணியில் ஏனைய கட்சிகளின் பிரதிநிதித்துவம் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை.

அதனால் எமது கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதற்கு முன்னர் எமது கட்சியினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

அதனால் தேசியப்பட்டியல் உறுப்பினரை பெயரிடும் விடயத்தில் எங்களால் எந்தவித சட்டவிராேத நடவடிக்கையாே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

No comments:

Post a Comment