வர்த்தமானியில் ரவி, நாமல், சத்தியலிங்கத்தின் பெயர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, November 18, 2024

வர்த்தமானியில் ரவி, நாமல், சத்தியலிங்கத்தின் பெயர்கள்

2024 பொதுத் தேர்தலில் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்கள் குறித்த அதிவிசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்சவும், தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பத்மநாதன் சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment