பதுளை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது வாக்குப் பெட்டிகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 12, 2024

பதுளை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது வாக்குப் பெட்டிகள்

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பதுளை மாவட்டத்துக்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பதுளை மத்திய மகா வித்தியாலயம், தர்மதூத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (13) கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 530 வாக்களிப்பு நிலையங்களில் 705772 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை, வியழுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவா பரணகம, வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், 69 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் அரச அதிகாரிகள் 10,000 பேர் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்பு கடமைகளுக்காக 3000 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்துக்கான 09 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்ய 15 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 05 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 240 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

No comments:

Post a Comment