பாடசாலைகளுக்கு விடுமுறை - News View

About Us

About Us

Breaking

Monday, November 18, 2024

பாடசாலைகளுக்கு விடுமுறை

அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான 3ஆம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, 3ஆம் தவணைக்கான முதல் கட்டம் 2024 நவம்பர் 22 அன்று முடிவடையும்.

பாடசாலைகள் விடுமுறை நவம்பர் 23ஆம் திகதி முதல் ஜனவரி 01 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

3ஆம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை 2025 ஜனவரி 02 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடத்தப்படும்.

No comments:

Post a Comment