பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு ஹேமாலி வீரசேகர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் கன்னி அமர்வு வைபவ ரீதியாக ஆரம்பமான நிலையில், பத்தாவது பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார்.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
அவரது பெயரை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க அதனை வழிமொழிந்தார்.
ஹேமாலி வீரசேகர தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இவர் கொழும்பு யசோதரா மகளிர் கல்லூரி மற்றும் தேவிபாளிகா கல்லூரி ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியைப் பெற்றதுடன், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக தொழில் ரீதியாக பணியாற்றியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தின் மகளிர் நிறைவேற்று உறுப்பினராகவும் கடமையாற்றிய இவர், முன்னாள் மஹர பிரதேச சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment