நாளை (14) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.
நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் 605,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா - மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 65 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களில் அரச அதிகாரிகள் 10,000 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்புக் கடமைகளில் 2500 பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்துக்கான 8 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
No comments:
Post a Comment