பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித் திட்டத்திற்கு பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித் திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.
எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்கவில்லை.
உதாரணத்திற்கு உயர் கல்வி, பெரு வீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெரு வீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எனவே பொருத்தமானது எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள்.
இப்படியல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில்நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக் கல்லூரிகள், பல்லைக்கழகங்கள் போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்.
மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரீட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில்கின்றனர். இந்த வயதுப் பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல.
எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித் திட்டமே தேவை என்றார்.
No comments:
Post a Comment