சுமந்திரனிடம் 50 கோடி ரூபா கோரும் அங்கஜனின் தந்தை - News View

About Us

About Us

Breaking

Thursday, November 7, 2024

சுமந்திரனிடம் 50 கோடி ரூபா கோரும் அங்கஜனின் தந்தை

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் ரூ. 50 கோடி நஷ்டஈடு கேட்டு, அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடக சந்திப்பொன்றில், “அங்கஜன் இராமநாதனின் தந்தையாரின் பெயரிலும் ஒரு மதுபானசாலைக்கான கடிதம் வழங்கப்பட்டமைக்கான அத்தாட்சி கடிதம் கூட வெளிவந்துள்ளது” என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார், என்றும் அதன் ஊடாக தனது பெயருக்கும், தனது மகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக தனது சட்டத்தரணி ஊடாக எம்.ஏ. சுமந்திரனிடம் ரூ. 50 கோடி இழப்பீடு கேட்டு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நடத்த பிரசார கூட்டம் ஒன்றில் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்த கருத்து தொடர்பிலும் இழப்பீட்டு தொகை கேட்டு, தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாகவும் சதாசிவம் இராமநாதன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment