3ஆவது ஒருநாள் போட்டிக்காக இலங்கை அணியில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 18, 2024

3ஆவது ஒருநாள் போட்டிக்காக இலங்கை அணியில் மாற்றம்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோரை அந்த போட்டியில் இருந்து விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு கால அவகாசம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக நுவனிந்து பெர்னாண்டோ, லஹிரு உதார மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி நாளை (19) பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment