20 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, November 12, 2024

demo-image

20 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்

24-6732ea771d8a5
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காக 20 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதில் தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் மேலதிகமாக 10 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர், இதில் ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.

அவர்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்த, பின்னர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிப்பார்கள்.

இதேவேளை, The Asian Network for Free Elections (ANFREL) சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்து தமது தேர்தல் கண்காணிப்பு கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *