பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, November 8, 2024

பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 11 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

இன்று வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 364 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவர்களில் 11 பேர் பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் ஆவர். 

துண்டுப்பிரசுர விநியோகம், பதாகைகளை காட்சிப்படுத்துதல், விடுவிப்புக்காக பொலிஸ் நிலையத்திற்குள் அமைதியற்ற முறையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு இதுவரை 340 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவற்றில், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 54 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 286 முறைப்பாடுகளும் காணப்படுகின்றன. சந்தேக நபர்களிடமிருந்து 94 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும், 50 இலட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத சுவரொட்டிகள், 458 பேனர்கள், 1,322 கடவுட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment