இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கான ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் மேலும் 8 உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.
இன்று (04) காலை 10.15 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான IFC-34 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த குழுவினர் வந்தடைந்துள்ளனர்.
கலாநிதி எஸ். ஜெய்சங்கர் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ள கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழு மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இக்குழுவினரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இன்று (04) இலங்கைக்கான ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பிற்பகல் 6.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அதே விமானத்தில் இந்தியாவின் புதுடில்லிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment