பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 19, 2024

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் செலுத்தப்படும் HPV தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பாடசாலை மாணவிகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் அந்த மாணவிகளுக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், சுகயீனமுற்ற மாணவர்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் குணமடைந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு, தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் சிறு பக்க விளைவுகள் அவை குறுகிய கால அறிகுறிகள் என குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் போது ஏற்படும் அச்சம் காரணமாக சிறுவர்களுக்கு சிறு மயக்க நிலை போன்ற குறுகியகால பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் பெண்களிடையே காணப்படும் புற்று நோய்களில் கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோயும் ஒன்றாக காணப்படுவதுடன், அதை தடுப்பதற்கான மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான வழி HPV தடுப்பூசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment