இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதன் பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓடுபாதையின் விசேட பகுதியில் வைத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், விமானத்தில் அவ்வாறான வெடிபொருட்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
விஸ்டாரா எயார்லைன்ஸ் விமானம் UK-131, இன்று (19) பிற்பகல் 12.25 மணிக்கு இந்தியாவின் மும்பையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இருந்த, இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை பிற்பகல் 2.51 க்கு வந்தடைந்தது.
ஏர்பஸ் ஏ-320 ரக விமானமான இந்த விமானத்தில் 96 பயணிகளும் 08 பணியாளர்களும் இருந்தனர்.
இலங்கைக்கு வரும் விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக இந்தியாவில் உள்ள விஸ்தாரா எயார்லைன்ஸ் தலைமையகத்திற்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கிடைத்தது.
அதன்படி கட்டுநாயக்க விமான நிலைய வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள், விமானப்படை மற்றும் இராணுவ கொமாண்டோக்கள், வைத்தியர்கள், தாதியர்கள், அம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், அவசரகால மீட்பு குழுக்கள், தொடர்பாடல் திணைக்களங்கள் வரவழைக்கப்பட்டு இந்த விமானத்தை பரிசோதிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பி.ப. 4.00 மணியளவில், இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு சோதனைகள் நிறைவடைந்தன.
பி.ப. 4.00 மணியளவில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு சோதனைகள் முடிக்கப்பட்டன.
இதேபோல், இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக இந்தியாவில் உள்ள விஸ்தாரா எயார்லைன்ஸ் தலைமையகத்துக்கு மற்றொரு அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்ததால், அந்த விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாயக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment