அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கவும் - தேர்தல் ஆணைக்குழு - News View

About Us

Add+Banner

Breaking

  

Monday, September 30, 2024

demo-image

அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கவும் - தேர்தல் ஆணைக்குழு

24-66bc3306a6b6b
(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் பொதுத் தேர்தலுக்கும் தபால் மூல வாக்களிப்புக்கு கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை, நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள்  இம்மாதம் (04)  முதல் (11)   வரை தாக்கல் செய்யப்படவுள்ளன.

தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள அரச உத்தியோகத்தர்கள் செவ்வாய்க்கிழமை (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்த சகல அரச உத்தியோகத்தர்களும். பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தகைமையுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுடைய விண்ணப்பங்களும் 2024.10.08 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய மாவட்டத்தின் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்கு (மாவட்டத் தேர்தல் அலுவலகம்) கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்தல் வேண்டுமென்பதுடன், அனைத்து தாபனத் தலைவர்கள், அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் மற்றும் அஞ்சல் மூல வாக்காளர்களுக்கும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு 736,586 பேர் விண்ணப்பிருத்திருந்த நிலையில் 24,286 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலில் 712321 அரச உத்தியோகஸ்தர்கள் தபால் மூலம் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் இடாப்புக்கு இணங்க, இந்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும், விசேடமாக கலந்துரையாடப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *