நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2024

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று (30) மாலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்போலோ வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றுப் பகுதி இரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்துக்கு இன்று (01) ஆஞ்சியோகிராமை விட அதிநவீன அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக வைத்தியக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ வைத்தியசாலையில் ரஜினி சிகிச்சை பெற்றார்.

மேலும், உடல்நலக்குறைவை காரணமாக கூறி அரசியலுக்கு வரும் முடிவையும் ரஜினி அப்போது கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment