போலி இணையத்தளம் : விசாரணைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 11, 2024

போலி இணையத்தளம் : விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் போன்ற போலியான இணையத்தளம் ஒன்று இயங்குவது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

போலி இணையத்தளம் பொதுமக்களின் தகவல்களை திரட்டி வருகின்றது என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சைபர் குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவினரை கேட்டுக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கையின் கணிணி அவசர தயார்நிலை பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த போலி இணையத்தளம் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட கூகுள் சேவையிலிருந்து இயக்கப்படுகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை சேர்ட் அந்த இணையத்தளத்தை கண்டுபிடித்தது, அந்த இணையத்தளம் ஏனைய இணையத்தளங்கள் போல செயற்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழு வேலைக்காக ஆட்களை திரட்டுகின்றது என்ற செய்தியை வட்ஸ்அப் ஊடாக பொதுமக்களிற்கு அனுப்புகின்றது. பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை அந்த இணையத்தளம் சேகரிக்கின்றது.

No comments:

Post a Comment