முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளராக நவாஸ் பதவியேற்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 7, 2024

முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளராக நவாஸ் பதவியேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.எம். நவாஸ் செவ்வாய்க்கிழமை (06) தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். 

இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1 ஐச் சேர்ந்த இவரை அமைச்சு புதிய பணிப்பாளராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இவர், இறைவரித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் அதன் பின்னர் கைத்தொழில் அமைச்சின் மேலதிக உதவிச் செயலாளராகவும் கடமையாற்றி தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment