தடைப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் மீளபதிவு செய்வதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டில் புதிய பள்ளிவாசல்களை பதிவு செய்கின்ற நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அமைச்சின் உத்தரவுக்கமைய நிறுத்தி வைத்திருந்தது.
அதன் பின்னர் இவ்விடயம் சம்பந்தமாக பலமுறை பல முயற்சிகள் இடம்பெற்றிருந்தது. இவ் முயற்சிகள் அனைத்தும் கைகூடாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிதாக திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுள்ள திரு. M.H.A.M. றிப்லான், உதவிப் பணிப்பாளர் திரு. M.S. அலா அஹமட் மற்றும் இலங்கை வக்ப் சபையின் உறுப்பினர் சட்டத்தரணி திரு. M.A. மத்தீன் ஆகியோர் இவ்விடயம் சம்பந்தமாக புத்தசாசனம் மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மற்றும் செயலாளரரோடு பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை முழு மூச்சாக நடாத்தி தடைப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் பதிவை மீண்டும் மீள ஆரம்பித்துள்ளார்கள்.
அதன் பிரகாரம் 01.08.2024 முதல் பள்ளிவாசல்கள் மீள்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பதிவுச் சான்றிதழ்கள் பதிவு தபால் மூலம் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment