நுவரெலியா, மந்தாரநுவரயில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் (21) தோண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை நேற்று (22) மேற்கொள்ளப்பட்டதாக மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
ஹேவாஹட்ட முள்ளோயா தோட்டத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சிவலிங்கம் தர்ஷினி என்ற பெண், மந்தாரநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனப்பிட்டிய, சீனாபிட்டி தோட்ட அடர் வனப் பகுதியில் இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் சடலமாக தோண்டி எடுக்கப்பட்ட பெண் அக்கரப்பத்தனை மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 6 மாதத்துக்கும் மேலாக குறித்தப் பெண் காணாமற்போயிருந்ததாக அக்கரப்பத்தனை மற்றும் மந்தாரநுவர பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், காணாமற்போன பெண் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணால்போயிருந்த பெண் பாவித்து வந்ததாக கூறப்படும் கைத்தொலைபேசி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இயங்கியுள்ளமையை கண்டுபித்துள்ளனர்.
இதனை ஆதாரமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மன்றாசி பிரதேச வைத்தியசாலையில், காணாமற்போயிருந்த பெண்ணுடன் பணியாற்றிய நபரொருவர் அப்பெண்ணின் கைத் தொலைபேசியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இப்பெண்னை படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், கோனப்பிட்டிய சீனாபிட்டி கீனாகலை தோட்ட அடர் வனத்தில், புதையல் தோண்டுவதற்காக பழி கொடுப்பதற்கு, இப்பெண்னை கடத்திச் சென்று படுகொலை செய்து புதைத்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
(ஆ.ரமேஸ்)
No comments:
Post a Comment