தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 27, 2024

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ், பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (27) காலை உயிரிழந்தார்.

இவரது இறுதி சடங்கு இன்று மாலை 5.00 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருக்கு குடும்பத்தினர் மற்றும் திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment