ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளரும், அக்கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவருமான, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (04) தனது தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அபேகுணவர்தன, கட்சி ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
தமது தீர்மானம், தமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நடவடிக்கையல்ல என அவர் இதன்போது தெரிவித்தார்.
அரசியலில் நிரந்தர நண்பர்களோ நிரந்தர எதிரிகளோ கிடையாது என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணிக்கு இந்த நாட்டைக் கொடுப்பதா? அல்லது காலை பேசுவதை மாலையே மறக்கும் சஜித்துக்கு இந்த நாட்டைக் கொடுப்பதா? எனக் கேள்வியெழுப்பிய அவர், இந்த வாய்ச்சொல் தலைவர்களுக்கு நாட்டைக் கொடுப்பதை விட, உங்கள் கருத்தைக் கேட்டு அதற்குத் தலை வணங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டத்திற்கு தயாராகி வருகிறேன் என தமது ஆதரவாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment