ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் தினத்தில் (15) தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் அமைந்துள்ள இராஜகிரிய சரண மாவத்தை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படவுள்ளது.
இதைக்கருத்திற் கொண்டு அன்றையதினம் இப்பிரதேசத்தில் போக்குவரத்துச் செய்வது மற்றும் நடமாடுவது என்பவற்றை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன், வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வருகை தரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளருடன் கட்சியின் செயலாளர் உட்பட இருவர் மாத்திரமே வேட்புமனு ஏற்கும் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களைத் தவிர மேலும் மூவர் தேர்தல் அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment