இளம் தலைமுறையினரின் வாக்குகளை வென்றுள்ள அனுரகுமார திசாநாயக்கா - News View

About Us

About Us

Breaking

Friday, August 30, 2024

இளம் தலைமுறையினரின் வாக்குகளை வென்றுள்ள அனுரகுமார திசாநாயக்கா

18 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பது கருத்து கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக

குறித்த விடயமானது, இன்ஸ்டியுட் போர் ஹெல்த் பொலிசி (Institute For Health Policy) எனும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பொன்றிலேயே தெரியவந்துள்ளது.

ஜூன், ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகளில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் அனுரகுமார திசநாயக்கவிற்கு 54 வீதமானவர்களும், சஜித் பிரேமதாசவிற்கு 35 வீதமானவர்களும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு 9 வீதமானவர்களும் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

கருத்து கணிப்பில் கலந்துகொண்ட 30 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களில் 38 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவிற்கும், 37 வீதமானவர்கள் அனுரகுமார திசநாயக்கவிற்கும், 22 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 38 வீதமானவர்கள் சஜித்பிரேமதாசவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ள அதேவேளை 16 வீதமானவர்கள் அனுரகுமார திசநாயக்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment