எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 8 பேர் இலஞ்சம் கோரும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடமிருந்து ரூ. 30 மில்லியன் (௹. 3 கோடி) தொகையை இலஞ்சமாக பெறும்போது கைது செய்யப்பட்டதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
ஜனக ரத்நாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் லங்கா பொதுஜன கட்சி சார்பில் போட்டியிட இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் அக்கட்சியின் உறுப்புரிமையை பெறுவதற்காக ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் பெறும்போதே பொரளையில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் மோசடி மற்றும் விரையத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் கமந்த துஷாரவின் முறைப்பாட்டுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment