மூதூரில் 17 பேர் கொல்லப்பட்டு 18 வருடங்கள் : இன்னும் நீதி கிடைக்கவில்லை என கவலை - News View

About Us

About Us

Breaking

Sunday, August 4, 2024

மூதூரில் 17 பேர் கொல்லப்பட்டு 18 வருடங்கள் : இன்னும் நீதி கிடைக்கவில்லை என கவலை

திருகோணமலை மூதூர் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04) 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 18 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிகின்றனர்.

2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள், மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து 2006 ஓகஸ்ட் 04ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இப்­ப­டு­கொ­லையில் முத்­து­லிங்கம் நர்மதன், சக்திவேல் கோணேஸ்வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்­கராஜா பிறீமஸ், ஏ.எல். மொஹமட் ஜௌபர், ஆனந்­த­ராஜா மோகனதாஸ் ரவிச்­சந்­திரன், ரிஷிகேசன், கன­க­ரத்­தினம் கோவர்த்­தனி, கணேஷ் கவிதா, செல்லையா கணேஷ் சிவப்­பி­ர­காசம் ரொமிலா, வயி­ர­முத்து கோகிலவ­தனி, அம்­பி­கா­வதி ஜெய­சீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரைராஜா கேதீஸ்­வரன், யோக­ராஜா கோடீஸ்­வரன், முர­ளீ­தரன் தர்ம­ரட்ணம் ஆகியோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த அக்ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த மேற்­படி 17 பணி­யா­ளர்­க­ளையும் சீரு­டையில் வந்த ஆயுதம் தரித்த நபர்கள் நிலத்தில் குப்­பு­றப்­ப­டுக்கச் செய்து பின்பக்கமாக தலை­யில் சுட்டு படு­கொ­லை­ செய்ததாக அன்­றைய செய்­திகள் தெரி­வித்­தன.

No comments:

Post a Comment