மாணவனின் புத்தகப் பையில் கஞ்சா : தாய் கைது, தந்தையை தேடும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 30, 2024

மாணவனின் புத்தகப் பையில் கஞ்சா : தாய் கைது, தந்தையை தேடும் பொலிஸார்

முல்லைத்தீவு கள்ளப்பாட்டு கிராமத்தில் தமது பிள்ளையின் புத்தகப் பையில் கஞ்சா பொதியினை மறைத்து வைத்து பாடசாலைக்கு அனுப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவனின் புத்தகப் பையில் கஞ்சா பொதியை அவதானித்த ஏனைய மாணவர்கள் அதிபர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, குறித்த மாணவன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மாணவன் கஞ்சா பாவிப்பதில்லை என தெரிய வந்துள்ளது.

குறித்த மாணவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பெற்றோர்கள் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார், குறித்த வீட்டிற்கு சென்றபோது அங்கு மாணவனின் தந்தை வீட்டில் இல்லாத நிலையில், தாயார் மட்டும் இருந்துள்ளதைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ளனர்.

மாணவனின் தாயை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்த முல்லைத்தீவு பொலிஸார், மாணவனின் தந்தையை கைது செய்யும் முயற்சியில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

No comments:

Post a Comment