முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை மகளிர் அணி ! - News View

About Us

About Us

Breaking

Sunday, July 28, 2024

முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை மகளிர் அணி !

இந்திய அணிக்கு எதிரான இன்று (28) இடம்பெற்ற ஆசியக்கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.

No comments:

Post a Comment