எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே செயற்பட்டேன், எனக்கு பின்னால் எந்த அரசியல் சக்தியும் இல்லை : மனுத்தாக்கல் செய்த வர்த்தகர் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 7, 2024

எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே செயற்பட்டேன், எனக்கு பின்னால் எந்த அரசியல் சக்தியும் இல்லை : மனுத்தாக்கல் செய்த வர்த்தகர்

ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் வரை ஜனாதிபதித் தேர்தலிற்கு இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரும் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வர்த்தகர் சமிந்திர தயான் லெனவ, தான் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 19 வது திருத்தம் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என தான் கருதுவதாக தெரிவித்துள்ள அவர் இந்த தவறு குறித்து தான் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து நீதிமன்றத்திடமிருந்து தெளிவுபடுத்தல்களை பெறும் நோக்கத்துடன் நான் செயற்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு பின்னால் எந்த அரசியல் சக்தியும் இல்லை எனக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அபிவிருத்தி முன்னணியின் தேசியப்பட்டியலில் தனது பெயர் காணப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அந்த கட்சியுடன் இணைந்து நான் அரசியலில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி செயலாளரின் வேண்டுகோளை தொடர்ந்தே தேசியப்பட்டியலில் தனது பெயரை சேர்ப்பதற்கு தான் அனுமதி வழங்கியதாக குறிப்பிட்டுள்ள அவர் தனக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிப்பதை நிராகரித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் மேலும் பலர் மனுத்தாக்கல் செய்வதை வரவேற்பதாக தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இந்த விடயம் குறித்து பரந்துபட்ட விவாதம் இடம்பெறும் கவனயீர்ப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment