லைபீரிய ஜனாதிபதி Joseph Boakai தனது சம்பளத்தை 40 வீதத்தால் குறைப்பதாக அறிவித்துள்ளார்.
பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கான ஒரு முன்மாதிரி செயற்பாடாக இந்த தீர்மானம் இருக்கும் என அவர் நம்புவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பில் லைபீரிய பிரஜைகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்க தரப்பினருக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பில் தீவிரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமது வருடாந்த சம்பளமான 13,400 டொலர் தொகையை 40 வீதத்தால் குறைத்து 8,000 டொலராக பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி George Weah தனது சம்பளத்தில் 25 வீத குறைப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment