பஸ் கட்டணங்கள் இன்று நள்ளிரவு (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணத்தை 5.27 வீதத்தால் குறைக்க, தாம் திட்டமிட்டதாகவும், அதனடிப்படையில் இதுவரை 30 ரூபாவாகவிருந்த ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
தேசிய பஸ் கட்டண கொள்கையின்படி இந்த விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறைக்கப்பட்டுள்ள பஸ் கட்டணத்தை மக்கள் முழுமையாக பெற்றுக் கொள்ள வேண்டுமானால், பஸ்களில் பயணம் செய்யும்போது சில்லறை காசுகளை கொண்டு வருவது முக்கியமாகும்.
அவ்வாறில்லையானால் 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ள 30 ரூபா கட்டணம் அறவிடப்படும்போது சில்லறைக் காசு பிரச்சினைகள் ஏற்படலாம்.
அத்துடன் அனைத்துக் கட்டண அறவீட்டின் போதும் ஒரு ரூபா, இரண்டு ரூபா மற்றும் ஐந்து ரூபா என சில்லறைக் காசு பிரச்சினைகள் ஏற்படலாம். அதனை தவிர்த்துக் கொள்வதில் பயணிகள் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், கட்டணத்தை குறைப்பதற்கு பஸ் சங்கங்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் ஷஷி வெல்கம தெரிவித்தார்.
தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் இன்று (01) கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்த ஷஷி வெல்கம, இதற்கமையவே கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பஸ் கட்டணம் குறைப்பு தெடர்பில் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம, ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன, ஆணைக்குழுவின் பணிப்பாளர் (திட்டமிடல்) கே.ஏ.சி.கருணாரட்ண ஆகியோர் கட்டணத் திருத்தம் மற்றும் குறைப்பு பற்றியதான அறிவித்தலை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment