சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலி - News View

About Us

About Us

Breaking

Monday, July 1, 2024

சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலி

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் நாளை (02) காலை 9.00 மணியிலிருந்து மக்களது அஞ்சலிக்காக வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் நாளை மறுநாள் (03) பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

மேலும், இறுதிக்கிரியைகள் குறித்து குடும்பத்தார் தகவல் வெளியிடவில்லை எனினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment