ஒரு நாட்டின் குடிமக்களின் மனித வள மூலதன வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய சிறந்த திட்டம் கிராமத்திலும் நகரத்திலும் அமைந்து காணப்படும் பாடசாலைகளை வலுப்படுத்துவதாகும். பிள்ளைகளுக்கு தரமான தரத்திலான சர்வதேச கல்வியை வழங்குவதன் மூலம் ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 361 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கம்பஹா, ஜா-எல, நாகொட புனித ஜோன் பெப்டிஸ்ட் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு 22 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஸ்மார்ட் குடிமக்களைக் கொண்ட ஒரு நாட்டில், மனித மூலதனத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். வீட்டுப் பணியாளர்கள் எமது நாட்டிற்காக பெரும் தியாகங்களைச் செய்து, அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றனர்.
Health care given எனும் தொழிற்துறையின் கீழ் கூடிய வருமானம் சம்பளம் ஈட்டலாம். என்றபடியால், இதன் ஆரம்ப கட்டமாக, அரச-தனியார் கூட்டாண்மைத் திட்டங்களின் ஊடாக நிபுணத்துவம் வாய்ந்த தாதியர்களாக மாற்றும் நடவடிக்கையின் நிமித்தம் 9 மாகாணங்களிலும் சர்வதேச தரத்திலான 9 தாதியர் பயிற்சி நிலையங்களை நிறுவுவேன்.
இத்திட்டத்தின் கீழ், திறன் மற்றும் தகுதியை மையமாகக் கொண்ட இலக்கு வைக்கப்பட்ட இத்துறைசார் ஏராளமான வேலைகள் எமது நாடு பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. பிலிப்பைன்ஸில் இந்தப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், நாமும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
அவ்வாறே, பிரதேச செயலக மட்டத்தில் இளைஞர் அபிவிருத்தி நிலையங்கள் தாபிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திலும் சர்வதேச தாதியர் பயிற்சி நிலையங்கள் நிறுவப்படுவது போல், இந்தியாவில் காணப்படுவது போலான IIT, IIM நிறுவனங்கள் நிறுவப்பட்டு முக்கியமான மனித மூலதனம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அறிவால் ஆயுதம் ஏந்திய தலைமுறையை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment