அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க திறைசேரிக்கு மேலும் 400 மில்லியன் ரூபா தேவைப்படும் - அமைச்சர் மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 9, 2024

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க திறைசேரிக்கு மேலும் 400 மில்லியன் ரூபா தேவைப்படும் - அமைச்சர் மனுஷ நாணயக்கார

அரச துறையில் பணிபுரியும் 15 இலட்சம் ஊழியர்களுக்கும் 25,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கினால், திறைசேரிக்கு மேலும் 400 மில்லியன் ரூபா தேவைப்படும் என தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் நாட்டில் விவசாயத்துறை வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு விமானச் சீட்டுகளை வழங்கும் நிகழ்வு தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், நாட்டின் தற்போதைய சூழலில் அவ்வாறு செயற்பட முடியாது என தெரிவித்துள்ள அமைச்சர், அவ்வாறாயின் மீண்டும் வரி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக மக்களைத்தூண்டிவிடும் ஜே.வி.பியின் முயற்சியே இது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அனுரகுமார திசாநாயக்க டில்வின் சில்வா ஆகியோர் தலைமையிலான ஜேவிபியின் செயலே இதுவென்றும் அது இரகசியம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

வேலை வாய்ப்புகளை இல்லாதொழித்து பாடசாலைகளை மூடுவதன் மூலம் மீண்டும் 1987 - 1989 கால அராஜக நிலையை நாட்டில் ஏற்படுத்தி இளம் மாணவர்களை வீதிக்கு கொண்டுவந்து, அரசியல் இலக்குகளை நிறைவேற்றுவதே ஜேவிபியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது மாத்திரமே எஞ்சியுள்ளது. இவ்வாறான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பொறுக்க முடியாத சில அரசியல் கட்சிகளே, நாட்டிற்கு வருகின்ற நற்செய்தியை விரும்பவில்லை. 

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாவது தவணைக் கடன் கிடைத்ததும் 40 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. தற்போது கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச தரத்தில் நாடு பொருளாதாரத்தில் முன்னோக்கி நகரும் நிலையில் 25 ஆயிரம் ரூபா சம்பளம் கோரி வேலை நிறுத்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment