28 வருடங்களின் பின் தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 9, 2024

28 வருடங்களின் பின் தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இன்று நடைபெற்ற சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் முடிவடைந்ததும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்திற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

1991ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கைத் தொலைத்தொடர்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக 2024 மே 04ஆம் திகதி தொழில்நுட்ப அமைச்சினால் இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், இது 28 வருடங்களின் பின்னர் திருத்தப்பட்டுள்ளது.

இதுவரை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றும் வகையில், போட்டி நிறைந்த சந்தையில் நுகர்வோருக்கு நியாயமான ஒழுங்குமுறைப்படுத்தலை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இந்தத் திருத்தச்சட்டமூலம் வழங்குகின்றது.

No comments:

Post a Comment