இலங்கையின் பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் பொதுப் போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று (29) முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பயணிகள் அல்லது பொருட்களின் போக்குவரத்திற்கான பொது போக்குவரத்து சேவைகள், வீதிகள், பாலங்கள், ரயில் பாதைகள் ஊடான போக்குவரத்து மற்றும் அதன் பராமரிப்பு ஆகியனவும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றினால் வழங்கப்படும் சேவைகள் வழமையான பொதுமக்கள் வாழ்வை கொண்டு நடத்துவதற்கு இன்றியாமையாதென மற்றும் சொல்லப்பட்ட சேவைக்கு இடையூறாக கூடுமென்பதை அல்லது தடையாக கூடுமென்பதை கருத்திற்கொண்டு பொதுப் போக்குவரத்து சேவை, பொது போக்குவரத்துப் பணிகளுக்காக அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment