இன்று சமூகத்தில் ஜனாதிபதி கனவில் பலர் இருந்தாலும், நாட்டின் டொலர் பற்றாக்குறைக்கும், ரூபாய்களின் பற்றாக்குறைக்கும் 76 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், அதிகாரம் இல்லாமல் சேவைகளை முன்னெடுத்துவரும் ஒரே தரப்பான ஐக்கிய மக்கள் சக்தியினாலயே பதில் சொல்ல முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மாத்தளையில் இன்று (30) இடம்பெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி நியமிக்கப்பட்டாலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு மட்டுமே சமூகமளிக்கிறார். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் மக்கள் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி செயலக பிரிவை நிறுவி, எந்தவொரு நபரும் எதிர்நோக்கும் பிரச்சினையையும் ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்க சந்தர்ப்பத்தை பெற்றுத் தருவோம். அதனூடாக விரைவான தீர்வுகள் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு தலைவர்களும் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கச் சென்று அடுத்தவர்களின் குறைகளை கிசுகிசுத்தாலும், எதிர்க்கட்சியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட சகல பணிகள் தொடர்பிலுமான விரிவான அறிக்கையுடனே தான் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
இந்த பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல என்றும், இவை அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தியினால் வகுக்கப்பட்டவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்நாட்டின் அரச வருமானம் மாத்திரம் போதாது. இதற்காக அனைத்து மூலதன நாடுகளுடனும், செல்வந்த தரப்பினரோடும் கலந்துரையாடி, எமது நாட்டுக்கான அதிகபட்ச முதலீட்டையும் நன்மைகளையும் பெற்றுத் தருவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
ஸ்மார்ட் நாட்டை கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் தகவல் தொழில்நுட்பம் ஆற்றல் வழங்கப்பட வேண்டும். உலகில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் உச்சத்திற்கு சென்றுள்ளது. நெதர்லாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ரணசிங்க பிரேமதாச ஆடைத் தொழிற்சாலை புரட்சியை முன்னெடுத்தது போல, இலத்திரனியல் பொருட்களின் உற்பத்தி, நவீன சாதனங்களை உருவாக்கும் ஸ்மார்ட் நாட்டை நாம் உருவாக்குவோம். இங்கு கட்சி, இனம், மதம், சாதி, வர்க்கம், அந்தஸ்து முக்கியமில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம்.
இந்த மாத்தளை மாவட்டத்தில் இன மத வேறுபாடின்றி, வேலையில்லாத இளைஞர்கள் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம். அவர்களை தேசிய உற்பத்திக்கு பங்காளிகளாக்குவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment