இலங்கை வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2024

இலங்கை வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான அன்டனோவ் 124 (ANTONOV-124) நேற்றுமுன்தினம் (28) கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

மத்திய ஆபிரிக்க குடியரசில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் படையினருக்கு எம்.ஐ. 17 ஹெலிகொப்டர் (MI-17 Helicopter) ஒன்றை கொண்டு செல்வதற்காகவே இந்த விமானம் இலங்கைக்கு வந்தது. 

2014 ஆம் ஆண்டு முதல் மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில், இலங்கையின் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விமானத்தில் இது போன்ற 03 ஹெலிகொப்டர்களை ஏற்றிச் செல்லக்கூடிய வசதிகள் உள்ளன.

அன்டனோவ் - 124 விமானம் ஹெலிகொப்டரை ஏற்றிக் கொண்டு நேற்று 29 அதிகாலை 05.30 மணிக்கு கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்திலிருந்து மத்திய ஆபிரிக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றது.

No comments:

Post a Comment