கார் ஒன்று மோதியதில் வெடித்த நீர் குழாயை இன்று (17) பிற்பகல் வேளையில் முழுமையாக சரி செய்ய எதிர்பார்ப்பதாக, லபுகம, கலட்டுவாவ நீர்த் தேக்கத்தின் செயற்பாட்டு முகாமையாளர் பியால் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
இந்த விபத்தினால், கலட்டுவாவ நீர்த் தேக்கத்தில் இருந்து நீர் கொண்டுசெல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, மறு அறிவித்தல் வரை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதன்படி, கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
ஹைலெவல் வீதியில் கொடகம சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள பெரிய நீர் குழாயில் கார் மோதியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று (17) அதிகாலையில் இருந்து விபத்து இடம்பெற்ற இடத்திலுள்ள பெரிய நீர் குழாயில் இருந்து பாரிய அளவில் நீர் வௌியேறி வருவதாகவும், நீரின் வேகம் காரணமாக குறித்த இடத்திற்கு அருகில் இருந்த மின்கம்பமும் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, விபத்தின் போது காரில் பயணித்த நால்வர் சிறு காயங்களுடன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
No comments:
Post a Comment