தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 17, 2024

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) இன்று (17) தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 ரூபா தொடக்கம், 200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யின் தற்போதைய சில்லறை விலை 550 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சுங்கத் திணைக்களம் தமது வரிகளை 150 ரூபாயால் அதிகரித்ததா? என அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, தேங்காய் எண்ணெய் கையிருப்புகளை கண்டுபிடிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment